Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ இல்லை… நடிகை நித்யா மேனன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலாக, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சிறந்த நடன இயக்கத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நித்யா மேனனுக்கு வாழ்த்துகள் பரவலாக வருகின்றன. அதேசமயம், சிலர் சமூக வலைதளங்களில் ‘இது வழக்கமான கதாபாத்திரம்தானே? சாதாரணமாக நடித்ததற்கு விருதா?’ என்று விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நித்யா மேனன், “திருச்சிற்றம்பலம் படத்தில் எனது நடிப்பு சாதாரணமாகத் தெரியும். ஆனால் அதன் பின்னுள்ள உழைப்பைப் புரிந்துகொண்ட தேர்வுக்குழுவுக்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ அல்லது செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான்; அதுவே முழுமையாகும் என்று நினைக்கக்கூடாது.

இதற்காக நான் எவ்வளவு உழைத்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த விருது எனக்கு மட்டுமல்ல; பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், மற்றும் தனுஷ் ஆகிய நால்வருக்குமானது. ஏனெனில், எந்தப் படத்திலும் நடிகருக்கு இணையான வேடத்தில் நான் இதுவரை நடித்ததில்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News