Saturday, September 14, 2024

கல்வி கட்டணம் செலுத்த பணமில்லை… நடிகர் தெனாலி மகனை நேரில் அழைத்து உதவிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர் விவேக்குடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் தெனாலி. தெனாலியின் மகன் வின்னரசன், டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்காக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தார். இதை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து, நிலைமையை கூறினார். இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி உடனடியாக 76 ஆயிரம் ரூபாயை கல்லூரியில் செலுத்தி, அவரின் மகனை பிசியோதெரபி மருத்துவராக உருவாக்க உதவியுள்ளார்.

இதுகுறித்து தெனாலி, “என் சந்ததியின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை நானும், என் மகனும் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது,” என நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News