இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது, மேலும் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.
உலகம் முழுவதும் வெளியாகவுள்ள தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் பண்டைய கால கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை வெளியாவதற்கு முன்பாக நடிகர் தனுஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு தெரிந்த மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரமின் தங்கலான் படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.