விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் நாளை (ஆக., 14) வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’ படம் விக்ரமின் வாழ்க்கையில் பெரும் மாற்றமாக அமைந்தது, அதேபோல் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படம் சூர்யாவின் திரையுலக பயணத்தில் மாறுபட்ட திசைதிருப்பம் கொண்டது. இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்’ படத்தில் இணைந்து நடித்தனர்.
அதற்கு பின், விக்ரம் மற்றும் சூர்யா இடையே சில தனிப்பட்ட காரணங்களால் மாறுபாடுகள் ஏற்பட்டன, இதனால் அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவும் இல்லை. இந்நிலையில், சூர்யாவின் உறவினரான கே.இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அறிவிப்பு வெளியான போது, திரையுலகத்தில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது.
கடந்த வாரம் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நாளை வெளியாக உள்ள இந்த படத்திற்கு சூர்யாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படக்குழுவினரை டேக் செய்து, “தங்கலான்… இந்த வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.