Tuesday, November 19, 2024

நடிகை சந்தியா ராஜூவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவர் நடத்தும் ‘அட் ஹோம்’ என்ற நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெறும் இந்த மாலை விருந்தில் மூத்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜூ கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக ஜனாதிபதி அழைப்பை, அரசு அதிகாரிகள் சந்தியா ராஜுவை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

சந்தியா ராஜூ தனது முதல் தெலுங்குத் திரைப்படமான ‘நாட்டியம்’ படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தலைவர், தொழிலதிபர் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகளாவார். சந்தியா ராஜூ ஐதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலாபிலிம்ஸின் நிறுவனர் என்ற முறையிலும் பிரபலமானவர்.

- Advertisement -

Read more

Local News