ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடர் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடரிலிருந்து நிறைய நடிகர்கள் விலகியுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் மெயின் ரோலில் நடித்து வரும் மிர்ச்சி செந்திலும், நித்யா ராமும் கூட சீரியலை விட்டு விலகிவிட்டதாக அண்மையில் இணையதளங்களில் செய்திகள் வைரலானது. இதனையடுத்து தொலைக்காட்சி தரப்பிலிருந்து மிர்ச்சி செந்தில், நித்யா ராம் விலகியுள்ளதாக வெளியாகி வரும் தகவல் போலியானது என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more