கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது. அந்த ஸ்பார்க் பாடலில் நடிகை மீனாட்சி சவுத்ரியுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் டி ஏஜிங் லுக்கில் விஜய். யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடலின் வரிகளை அவரது அப்பாவும் பிரபல இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரன் எழுதியுள்ளார். இவரது வரிகள் இந்தப் பாடலுக்கு ஸ்பார்க்கை கொடுத்துள்ளது.
இந்நிலையில் தான் இதுவரை ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியுள்ளதாகவும் ஆனால் விஜய்க்காக தான் எழுதிய முதல் பாடல் என்பதுதான் இந்த பாடலின் சிறப்பு என்றும் கங்கை அமரன் தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த வகையில் இந்தப் பாடல் சிறப்பாக மாறியுள்ளதாகவும் இந்தப் பாடலை அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய மகன் போன்றவர் என்றும் அவருக்காக பாடல் எழுதியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார்.
பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் பாடலை தான் எழுதிவிட்டதாகவும் தொடர்ந்து இந்தப் பாடலை தான் மறந்தே விட்டதாகவும் கங்கை அமரன் கூறியுள்ளார். இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தபோது கேட்ட விஜய், பாடல் குறித்து பாராட்டு தெரிவித்ததாகவும் மறந்துவிட்டார். இந்தப் பாடலை எழுதியபோது தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனாலும் யுவன் ட்யூனை அனுப்பியபோது 10 நிமிடங்களில் பாடல் வரிகளை தான் எழுதி அனுப்பிவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.