நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகி வைரலானது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000049843-683x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000049842-1024x496.jpg)
இந்த படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தின் தோற்றத்தில் படத்தின் போஸ்டரில் காட்சியளிக்கிறார். அஜித் குமார் தனது 32 வருட திரைப் பயணத்தை தொடர்வதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000049837-559x1024.jpg)
அதில் “32 வருட தைரியம், ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே பெருமையுடன் இருக்க வாழ்த்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.