வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில், நடிகர் விக்ரம் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
நடிகர் விக்ரமின் உதவியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளனர்.
மேலும், பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளார்.