தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன். இந்த நிலையில் அடுத்தபடியாக ஒரு சீரியல் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கியுள்ள அவர், அதன் மூலம் ஜீ தமிழ் சேனலுக்கு ஒரு சீரியலை தயாரித்து இயக்கி நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. மேலும், இதே ஜீ தமிழ் சேனலுக்காக ‛சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோவை அர்ஜுன் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more