கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை அஞ்சலி. எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வழங்கி வருகிறார்.
தமிழில் கதைநாயகியாக ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது, தன் 50-வது படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். 39 வயதாகும் அஞ்சலி பக்க்ஷிகரனா என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். இது ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடர் 3 நாளில் 35 மில்லியன் (350 லட்சம்) பார்வை நிமிடங்களை கடந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அஞ்சலி கூறியதாவது:அன்பு ரசிகர்களே, என்னுடைய புதிய தெலுங்கு இணையத்தொடரான பக்ஷிகரனா ஜீ5 ஓடிடியில் 3 நாளில் 35 மில்லியன் (350 லட்சம்) பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது.
புஷ்பாவாக நடிப்பது சவாலானது. எனக்கு அந்த சவால் பிடித்திருந்தது. எங்களது கதையை நீங்கள் எடுத்துக்கொண்ட விதம் பிடித்திருக்கிறது. நீங்கள் எனக்கு தரும் ஆதரவும் உற்சாகமும் என்னை இன்னும் புதிய புதிய கதாபாத்திரங்களில் நடிக்க தூண்டுகிறது. அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி எனக் கூறியுள்ளார்.