அஜர்பைஜானில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பாகக் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது நிறைவடைந்திருக்கிறது. படத்தில் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் உட்படப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இடைவெளியில்தான் அஜித் தன் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டு, ஒரு ஷெட்யூலை முடித்துக் கொடுத்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000041488-1024x683.jpg)
அஜர்பைஜான் படப்பிடிப்போடு, பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புனேயில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த மாதம் மொத்த டீமும் இதற்காக புனே செல்கிறது. அந்தப் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைகிறது. திட்டமிட்டபடி ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு முடிவடைந்தால் தீபாவளிக்கு ரிலீஸை எதிர்பார்க்கலாம் என்கின்றனர். இதற்கிடையே அடுத்த மாதம் படத்தின் டீசரை வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர். தவிர, படம் நவம்பரில் கண்டிப்பாகத் திரைக்கும் வரும் என்றும் அதற்கான தேதியும் குறிக்கப்பட்டு விட்டன என்ற பேச்சும் பட வட்டாரத்தில் நிலவுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000040065-2-683x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000034468-1-1024x496.jpg)
‘விடாமுயற்சி’யின் புனே ஷெட்யூலுக்கு முன்னர், ‘குட் பேட் அக்லி’யின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறும் என்கிறார்கள். இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வரும் அஜித்தின் இந்த வேகம் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.