Saturday, September 14, 2024

இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைத்தது படக்குழு… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளாலும் வசூலில் வெற்றியைப் பெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில், படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதால் படம் கலவையான விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது என்ற விவாதங்களும் எழுந்தன. படம் சிறப்பாக இருக்க படத்தின் நீளம் குறைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படக்குழு படத்தின் நீளத்தை 12 நிமிடங்கள் குறைத்துள்ளனர். இதில் தேவையற்ற காட்சிகளை நீக்கியுள்ளனர். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News