எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். அசுரவித்து, மஞ்சு, ரண்டமூசம் மற்றும் வாரணாசி ஆகிய படைப்புகளின் மூலம் அறியப்பட்டவர். எம்.டி.வாசுதேவனின் 9 சிறுகதைகளின் அடிப்படையில் ஆந்தலாஜி தொடராக உருவாகியுள்ளது. இந்த தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது. சிறந்த நடிகர்கள் நடித்த, 8 இயக்குனர்களால் இயக்கப்பட்ட 9 படங்களில் உள்ள கண்ணோட்டத்தை இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. ஒல்லாவும் தீரவும், கடுகண்ணவ ஒரு யாத்ரா, காழ்சா, ஷீலாலிகாதம், வில்பனா, ஷெர்லாக், ஸ்வர்கம் துரக்குண சமயம், அபயம் தீடி வேண்டும், கடல்கட்டு” இந்த 9 படங்களின் தொகுப்பை கொண்டு இந்த ‘மனோரதங்கள்’ தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்க இருந்தனர் ஆனால் சூழ்நிலை காரணமாக ஜீ5 ஓடிடி தளம் இத்தொடரை வெளியிடவுள்ளது. மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தொடர் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘மனோரதங்கள்’ தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி ஜீ-5 ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.