Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அனைத்தையும் எனது மனதில் வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்… பயோபிக் குறித்து மனம் திறந்த இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அன்றும் இன்றும் என்றும் இசையின் ராஜா என்றால் அது இசைஞானி இளையராஜா தான். தலைமுறைகள் பல தாண்டியும் அவர் இசையால் மக்களின் மனதில் ராஜ்ஜியம் செய்து கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மெர்குரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் நேற்று இளையராஜா இசை கச்சேரி நடத்தினார். அப்போது ரசிகர்களிடம் பயோபிக் குறித்து பேசிய அவர், சில பாடல்கள் உருவானது பற்றி நான் சொல்வதால் கிளாஸ் எடுக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றார்.

என்னுடைய பயோபிக் உருவாகவிருக்கிறது. சில விஷயங்களை நான் பகிர்ந்திருக்கிறேன். அதெல்லாம் அந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை. என்னைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு நீங்கள் சந்தோஷப்பட்டால்தானே எனக்கு சந்தோஷமாக இருக்கும். அனைத்தையும் எனது மனதில் வைத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்றார்.

- Advertisement -

Read more

Local News