Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இந்தியன் 2 படத்தை என்ஜாய் செய்தேன்… இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக வெளியான படம் தான் இந்தியன் 2. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் ஏராளம். இப்படி இருக்கும்போது படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்தும் விமர்சகர்கள் தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தியன் 2 படம் பார்த்த பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியன் 2 படம் பார்த்தேன். படத்தை என்ஜாய் செய்தேன். தான் நினைத்தனை திரையில் கொண்டு வர ஷங்கரைப்போல் யாராலும் உயிரைக் கொடுத்து வேலை செய்ய முடியாது என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். திரையில் நினைத்ததைக் கொண்டு வருவதில் நீங்கள் என்றக்குமே உத்வேகமாக உள்ளீர்கள் ஷங்கர் சார்.

உலக நாயகன் கமல்ஹாசன் சாரின் நடிப்பு எப்போதும் போல நெருப்பு பறக்கும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக இந்தியன் படத்தின் தீமுடன் சேனாபதி கதாபாத்திரத்தின் இண்ட்ரோ வரும்போது பார்க்கையில் நாஸ்டால்ஜிக்காக இருந்தது. படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாகவே கையாண்டுள்ளனர். உலக நாயகன் கமல் ஹாசனும், எஸ்.ஜே. சூர்யாவும் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் நடிப்பு நம்மை பிரமிக்கவைக்கும் அளவிற்கு உள்ளது. படத்திற்கு இசை அமைத்த அனிருத், ஒளிபதிவாளர் ரவி வர்மன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News