மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தமிழில் “அசுரன்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அஜித்துடன் “துணிவு” படத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், அஜித்துடன் இணைந்து லடாக் பகுதியில் பல மைல்கள் பைக் பயணம் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது முதல், பைக் ஓட்டுவதில் மஞ்சு வாரியருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அஜித் பைக் ஓட்டும் நுணுக்கங்களை மஞ்சு வாரியருக்குக் கற்றுக் கொடுத்ததுடன், டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும் ஊக்குவித்தார். இதனால் மஞ்சு வாரியர் டிரைவிங் லைசென்ஸ் எடுத்தார் மற்றும் கடந்த ஆண்டு புதிதாக பிஎம்டபிள்யூ பைக் ஒன்றையும் வாங்கினார். அவ்வப்போது பைக்கில் பயணிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது, தன்னுடைய சில நண்பர்களுடன் இணைந்து தொடர்ந்து பைக் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மஞ்சு வாரியர்.
சமீபத்தில் பைக் பயணம் மேற்கொண்ட மஞ்சு வாரியர், அதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, அதில் அஜித் குமாரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணங்களில், மஞ்சு வாரியரின் நீண்ட நாள் நண்பரான பினீஷ் சந்திரன் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.