விக்னேஷ் சிவன் அஜித் நடிக்கவிருந்த 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால் தற்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லலித் தயாரிக்கிறார், இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். முதலில் அவர் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்து, பின்னர் அதிலிருந்து விலகியதால், அவரது சினிமா வாழ்க்கை சீர்கெடும் என்று பலர் கூறினார்கள். அதனால், இந்தப் படத்தை வெற்றி படமாக்கி, தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எல்ஐசி படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது. லியோ படத்தை தயாரித்த லலித்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நிறுத்தப்படவில்லை, சில நாட்கள் இடைவேளையிலிருந்த பிறகு, விரைவில் படப்பணிகள் தொடங்கும் என்றும் மற்றொரு தகவல் பரவியிருக்கிறது.