அசுரன் படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், பசுபதி, டி.ஜே. அருணாசலம், கென் கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதில் சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மஞ்சு வாரியர் பலராலும் பாராட்டப்பட்டார்.
இந்த படத்தில் நடித்தது தொடர்பாக நடிகை மஞ்சு வாரியர் பேட்டி ஒன்றில் பேசினார். அது தற்போது இணையத்தில் உலா வருகின்றது. அந்த பேட்டியில், “நான் எனது குழந்தைப் பருவத்தில் 10 வயது வரை இருந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான், அதனால்தான் தமிழ் இந்த அளவிற்கு பேச முடிகின்றது. இயக்குநர் வெற்றிமாறன் என்னிடம் கூறினார், ஒரு கதாபாத்திரத்திற்கு நடித்த நடிகர்களே குரல் கொடுக்கும்போது அது மிகவும் நெருக்கமாக இருக்கும்” என கூறினார்.
இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க யார் காரணம் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை மஞ்சு வாரியர், எனக்கு முதலில் நடிகர் தனுஷ்தான் போன் செய்து, இது போன்ற கதை ஒன்று இருக்கின்றது, நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிங்க சரியாக இருக்கும்” எனக் கூறினார். அதன் பின்னர் இயக்குநர் வெற்றிமாறன் வந்து கதை கூறினார். நான் இந்த படத்தில் நடிக்க காரணம் எனக் கேட்டால் அது தனுஷ் தான் என பதில் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் உலா வருகின்றது.