சோசியல் மீடியாவில் ஸ்ருதிஹாசன் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவது வழக்கமான ஒன்று. சமீபத்தில், ஒரு ரசிகர் தென்னிந்திய மொழியில் ஏதாவது சொல்லுமாறு கேட்டார். அதற்கு அவர், தென்னிந்தியர், வட இந்தியர் என பிரிப்பது இனவாதமே என்று பதிலளித்தார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை இட்லி, தோசை, சாம்பார் என கிண்டல் செய்வது சரியல்ல. காமெடிக்காக கூட அப்படி சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் நான் தென்னிந்திய பாணியில் வாயை மூடிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்லிவிடுவேன் என்று பதிலளித்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more