Tuesday, November 19, 2024

கவினை வைத்து ஹிட் கொடுங்கள் பார்போம் – பேரரசு ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது படங்களை சிலர் காப்பி என்று விமர்சித்தாலும், அவரது மேக்கிங் மற்றும் சீன்கள் நன்றாக இருப்பதைக் கண்டு பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.

இந்த சூழலில், முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்தனர். அனிருத் இசையமைத்தார் ஷாருக்கான் தயாரித்த இப்படம்‌ ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அட்லீ பற்றி இயக்குநர் பேரரசு ஓபனாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அட்லீ பெரிய ஹீரோக்களை வைத்து தொடர்ந்து படம் இயக்கி வருகிறார். பெரிய ஹீரோவை வைத்து பலன் அடைவதைவிட, வளர்ந்து வரும் ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டும். நானும் விஜய், அஜித் படங்களை இயக்கிய பிறகு, பரத்தை வைத்து பழனி படத்தை இயக்கினேன். அதேபோல, இப்போது வளர்ந்து வரும் ஹீரோவான கவினை வைத்து அட்லீ படமெடுத்து ஹிட் கொடுக்க வேண்டும்” என்று ஒபனாக சவாலாக கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News