விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான “மகாராஜா” நேற்று திரையரங்குகளில் வெளியானது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும், விஜய் சேதுபதி திரும்பி வந்துவிட்டார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிறந்த தொடக்கத்தை பெற்றுள்ளது.

விக்னேஷ் சிவன் குறித்து விஜய் சேதுபதி பேட்டியொன்றில் கூறியதாவது, “நானும் ரௌடிதான் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு பிறகு விக்னேஷ் சிவனை அழைத்து சண்டை போட்டேன். நீங்கள் எனக்கு நடிப்பு கற்றுத்தர முயற்சிக்கிறீர்கள், எனக்கு புரியவில்லை என்று கூறினேன். நான்கு நாட்களுக்குப் பிறகு நயன் வந்து உங்கள் இருவருக்கும் என்ன பிரச்னை என்று கேட்டு சமாதானப்படுத்தினார்.

விக்னேஷ் சிவன் ரௌடிதான் படத்தின் கதையை சொல்லியபோது, அது அருமையாக இருந்தது. ஆனால், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதல்ல என்று விஷ்ணு விஷால் சொன்னார். முதல் நான்கு நாட்களுக்கு அந்த கதாபாத்திரம் எனக்கு புரியவில்லை. அப்போது நான் பாதுகாப்பற்றவனாக இருந்தேன். விக்னேஷ் சிவன் நிறைய மேஜிக் செய்வார்” என்று கூறினார்.
