Saturday, September 14, 2024

கல்கி படத்தின் வில்லன் கமல் இல்லையாம்… பெங்காலி நடிகராம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவொரு புராணம் கலந்த அறிவியல் புனைவு திரைப்படமாகும் மற்றும் இது வரும் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அவரின் நண்பராக புஜ்ஜி என்ற ரோபோ கார் தோன்றுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் கமல் இதனை மறுத்து, தனி தோற்றத்தில் மட்டுமே நடிப்பதாக தெரிவித்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டிரைலரில் இது உறுதியாகியுள்ளது. கமல்ஹாசன், பூமியை காப்பாற்ற பிரபாசுக்கு உதவ ஒரு வேறு கிரகத்திலிருந்து வரும் தலைவராக காட்சியளிக்கிறார். ஆனால், முக்கிய வில்லனாக வங்காள நடிகர் சாஸ்வதா சட்டர்ஜி நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

கோல்கட்டாவை சேர்ந்த சாஸ்வதா சட்டர்ஜி 1996ம் ஆண்டிலிருந்து பெங்காலி படங்களில் நடித்துவருகிறார். ‘கஹானி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ‘கல்கி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். பிரமாண்ட ஹாலிவுட் படங்களில் வில்லனாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரமாகவோ தென்கிழக்கு ஆசிய நடிகர்களை நடிக்க வைப்பது வழக்கம். அந்த வகையில் சாஸ்வதா சட்டர்ஜி இந்த படத்தில் நடிக்கவைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News