நடிகை மிருணாள் தாகூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார் போன்ற படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் மிருணாள் தாகூர் முன்னணி நடிகையாக உயர்ந்து, ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதாராமம் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த படம் அவரது அழகும் கவர்ச்சியான தோற்றத்தையும் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது.

இந்த நிலையில், தமிழில் அவர் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 23 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்தில் நாயகியாக ருக்மணி வசனத்தை ஏ.ஆர். முருகதாஸ் தேர்வு செய்தார். மிருணாள் தாகூரின் தேதிகள் ஒத்துவரவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையில், அடுத்ததாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள காஞ்சனா 4 படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மிருணாள் தாகூர், ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் காஞ்சனா 4 படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அழகான நாயகியான மிருணாள் தாகூரை அமைதியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள், அடுத்ததாக அவர் பேய் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியையும் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதையும் அறிய ஆவலுடன் உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாவதாகவும், செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
