நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகருமான வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுடைய குடும்பம் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயம் செய்துக்கொண்டனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.இவர் ஒரு ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார்.இருவரும் ஜாலியாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அங்கு அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை சரத்குமார் வழங்கியுள்ளார். அப்போது ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.ரஜினியோடு குடும்பமாக அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
