மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி பட ஷூட்டிங்கே முழுமையாக முடியாத நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தினை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலமானவர், அஜித்தின் அடுத்த படத்தை இவர் தான் இயக்கவிருந்தார் எனவும் நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித்துடன் கதையை கூறி ஒப்புதல் பெற்றதாகவும் தகவல் வெளியாகியது.
பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி அஜித்தின் அடுத்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், மூன்று அஜித் இருப்பதால், அவர் மூன்று வேடங்களில் நடிக்கிறாரா அல்லது மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், ஹைதராபாத்தில் படத்தின் ஷூட்டிங் நடந்து, சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், படத்தைப் பற்றிய புதிய தகவல் ஒன்று பரவுகிறது. அதன்படி, கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் இதில் நடித்தால், இது அஜித்துடன் அவர் முதன்முறையாக இணைவது என்பதும், த்ரிஷா மற்றும் Sree லிலா ஆகியோர் இப்படத்தில் நடிப்பார்கள் என முன்பு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.