Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வடக்கன் தலைப்புக்கு நோ சொன்ன சென்சார் போர்டு… தள்ளிபோனது வடக்கன் பட ரிலீஸ்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வடக்கன்’ திரைப்படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி மறுத்ததால், படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் குங்குமராஜ் மற்றும் வைரமாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார்.எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டீஸர் பெரும் கவனம் பெற்றது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வழங்கும் இப்படம், வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.சமீபத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட இப்படம், அதிகாரிகள் ‘வடக்கன்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

புதிய தலைப்பு ‘வடக்கு’ என பரிந்துரை செய்யப்பட்டாலும், அதற்கும் சென்சார் போர்டு அனுமதி மறுத்துள்ளது.இதனால், புதிய தலைப்புடன் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News