இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாதம் ஆகும் என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், ரசிகர்களின் மனதை சற்று ஆறுதல் படத்தும் வகையில் புதிய செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியன் 2 படத்தின் டிரைலர் விரைவில் மிகப் பிரமாண்டமாக வெளியிடப்படும் என்றும், இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான டிரைலரும் இணைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியன் 2 படத்தின் கதை நீண்டதன் காரணமாக அதை இரண்டு பாகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் தான் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதுமட்டுமின்றி பாடல் காட்சி ஒன்றை படமாக்குவதில் ஏற்பட்ட இழுபறி தான் காரணமாக கூறப்பட்டது. தற்போது எதுவாக இருந்தாலும் சரி சேனாபதியை திரையில் மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
