Tuesday, November 19, 2024

‘என்னை மன்னித்துவிடுங்கள்’ பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தனது இயக்குனர் வாழ்க்கையை தொடங்கினார். அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்தன.தற்போது, அவர் ட்ரெய்ன் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி, நடிகராகவும் பிரபலமடைந்த அவர், இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்திலும் நடித்துள்ளார்.இயக்குநர் விக்ரமனின் மகன் ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்த்திபன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில், மிஷ்கின் பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

அவர் கூறியதாவது, “இயக்குநர் பார்த்திபன் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும், மதிப்பும் உண்டு. அவரைப் பற்றி நான் தவறாக பேசியதாக சிலர் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. நான் அவரை பொதுவெளியில் ஒருபோதும் அவ்வாறு விமர்சித்தது கிடையாது.தனியறையில் இருந்தபோது, நான் இளையராஜா மற்றும் மணிரத்னத்தை விமர்சிக்க முடியும், அது என் உரிமை.

நமது வீட்டில் எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். பார்த்திபன் சாரைப் பற்றி நான் என்ன பேசினேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் எடுத்த புதிய பாதை எப்போதுமே எனக்கு சிறப்புள்ளது தான். நீங்கள் எனக்கு கடவுள் போன்றவர் பார்த்திபன் சார். ஒருவேளை நான் அறியாமல் ஏதேனும் தவறாக பேசியிருந்தால், அதை இங்கு மன்னித்து விடுங்கள். ஒருவரைப் பற்றிய தகவலை மற்றவரிடம் கூறுபவர் ஒரு கோழை அவரை நம்பாதீர்கள் என்றார்.

- Advertisement -

Read more

Local News