கடந்த ஆண்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 பெரும் வெற்றியை அடைந்தது. இதற்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.
சூர்யாவின் 44வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் அமைந்த கதைக்களமாக உருவாகவுள்ளது. மேலும், சூர்யா இதில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திருநாவுகரசு ஒளிப்பதிவு செய்கிறார். திருநாவுகரசு 24 மற்றும் பேட்ட படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடிக்கின்றார். அதை முடித்த பிறகு, அவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.