விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி அமைந்துள்ள படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அஜித் முடிப்பார் என சொல்லப்பட்டதுக.ஆனால் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போய்க்கொண்டே தான் இருக்கிறது இந்தநிலையில் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன்னர் வரலாறு படத்தில் அஜித் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருப்பார்.இந்நிலையில் பல காலங்களுக்கு பின்னர் அஜித் மீண்டும் இப்படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார்.இந்த செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு கெட்டப்புகள் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்த 3 வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கவுள்ள நிலையில் இதில் ஒரு கெட்டப்பில் அவர் யூத் பாய்யாக நடிக்க உள்ளதாகவும் மற்றொரு கெட்டப்பில் வரலாறு படத்தில் தோன்றுவது போல குடுமி வைத்தார் போல் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாம் சில காலமாக நடிகர் அஜித்-ஐ சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.அவரும் அதையே விரும்பும் நிலையில் அவரை மிகவும் கன்வின்ஸ் செய்து இளமை தோற்றத்தில் நடிக்க வைக்க தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. நடிகர் அஜித்தை 3 கெட்டபுகளிலும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.