தெலுங்கு சினிமாவில் தோல்வி என்றதே இல்லாமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாகவும், இந்தி, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியான இப்படம், பாலிவுட் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.




சுமார் ரூ.180கோடி பட்ஜெட்டில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா, நாசர் உள்ளிட்டோர் நடித்த முதல் பாகம் உலகம் முழுவதும் 650 கோடிகள் வரை வசூலித்தது. இது தென்னிந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டுக்கான புதிய மார்க்கெட்டைத் திறந்து வைத்தது. அதன் இரண்டாம் பாகம் 1000 கோடிகள் வசூலித்து புதிய சாதனை படைத்தது.

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் பான் இந்திய நடிகராக உருவெடுத்தார், மற்றும் படத்தில் நடித்த பிற நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களுக்காக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். 2017ஆம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகம், சமீபத்தில் வெளியான பாகுபலி க்ரவுன் ஆஃப் பிளட் என அடுத்தடுத்த பாகங்கள் வெளியானது. பாகுபலி உலகத்தைச் சுற்றி மேலும் பல திட்டங்கள் உள்ளன பாகுபலி 3ம் வர வாய்ப்புள்ளது என்று எஸ்.எஸ். ராஜமௌலி அறிவித்துள்ளார். இந்நிலையில், பாகுபலி திரைப்படம் இன்று 9 ஆண்டுகள் கடந்துள்ளது.