தமிழ் சினிமாவில் கணவன் மனைவியும் இயக்குனர்களுமான புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ‘ஓரம் போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா’ போன்ற படங்கள் வெளியானது. இதில் ‘விக்ரம் வேதா’ படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்தது.

கடைசியாக இவர்கள் இயக்கிய சுழல் மற்றும் சுழல் 2 வெப் தொடர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.தற்போது இவர்கள் அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதில் கதாநாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.