Tuesday, November 19, 2024

7வது முறை தேசிய விருதை வென்று சாதனை படைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ.ஆர்.ரஹ்மான் உலகளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்கிறார். தமிழ்ப் படங்களுக்கு மட்டுமல்லாமல், பெரும்பாலான ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், ஹாலிவுட் படங்கள், தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். கடந்த 32 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருகிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய விருதுகளில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக வென்றுள்ளார். இது அவர் பெற்ற 7வது தேசிய விருதாகும்.

முதன்முதலாக அவர் ‘ரோஜா’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். அதன்பின் ‘மின்சார கனவு’, ‘லகான்’ (ஹிந்தி), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘காற்று வெளியிடை’ ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுகளை வென்றுள்ளார். 2010ம் ஆண்டிலிருந்து, சிறந்த இசையமைப்பாளர் விருதுகள் “சிறந்த பாடல்களுக்காக” மற்றும் “சிறந்த பின்னணி இசைக்காக” என பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்குப் பிறகு, ஏஆர் ரஹ்மான் ‘மாம்’ ஹிந்தி படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், தற்போது ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக மீண்டும் அதே விருதையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News