Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

7ஜி ரெயின்போ காலனி எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துக் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘7 ஜி ரெயின்போ காலனி’, வெளியான போது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதே படம், ஒரே நேரத்தில் தெலுங்கில் ‘7 ஜி பிருந்தாவன் காலனி’ என்ற பெயரில் வெளியானதும் அங்கேயும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் செல்வராகவன் இயக்குவதோடு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜன் மற்றும் பலர் நடித்தும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி, இப்படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதிகளில் முடிவடைந்த நிலையில், சில மீதமுள்ள காட்சிகளை படமாக்குவதை சிறிது தாமதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை தயாரித்து வருபவர் ஏ.எம். ரத்னம், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரிஹர வீர மல்லு’ திரைப்படத்தை முடித்தும், அதை வெளியிடுவதிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்தப் படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன்பிறகு ‘7 ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு, குறுகிய காலத்திற்குள் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த படத்தினைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும், இந்த ஆண்டுக்குள் படம் வெளியாகும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும், இன்று சென்னையில் நடைபெற்ற ‘ஹரிஹர வீர மல்லு’ பட நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News