தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், தற்போது இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் காமெடி படமான ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய இரண்டு பிரபல நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார். கதையின் முக்கிய பங்குகளில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்கள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் மாருதி இந்தப் படம் தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “அதிக எச்சரிக்கை… மே மாதத்தின் மத்தியில் இருந்து வெப்ப அலையால் சூடு அதிகரிக்கும்” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம், ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.