சோனியா அகர்வால் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்தவர். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சோனியா அகர்வால் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளர் தரண்குமாருடன் இணைந்து ‘பேய் காதல்’ பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் பாடல் ஆல்பங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு சோனியாஅகர்வால் பதில் அளித்துள்ளார்.

அவர், எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன். தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன என தெரிவித்துள்ளார்.

நான் நடித்த ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தை ‘ரீ ரிலீஸ்’ செய்து தற்போது வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிப்பேன்” என்றார்.