Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் 20 நிமிடங்களை ஸ்டார் படத்தில் குறைக்க சொன்னேன்… ஆனால் நடந்தது வேறு…கவின் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின், தற்போது ‘ப்ளடி பக்கர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில், இயக்குநர் நெல்சன் இப்படத்தை தயாரித்துள்ளார். அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கவின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், அவர் ‘ஸ்டார்’ படத்தை குறிப்பிட்டு பேசினார்.

அவர் கூறுகையில், “ஸ்டார் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. ஆனால், கதை கேட்கும்போது சரியாகத்தான் இருந்தது. அதற்காகவே நான் அந்த நம்பிக்கையில் நடித்தேன். ஆனால் இறுதியில் படம் நீண்டதாக தோன்றியது. படம் நன்றாகவே உள்ளது, ஆனால் சில காட்சிகள் நீட்டிப்பாக இருந்தது.

எனவே ஒரு 20 நிமிட காட்சிகளை குறைக்கலாம் என கூறினேன், ஆனால் படக்குழு அதை மறுத்தது. இறுதியில் என்ன சொன்னது நடந்தது. இருப்பினும் தயாரிப்பாளர் ஹேப்பியாகவே இருந்தார்” என்று அவர் கலகலப்பாக கூறினார்.

- Advertisement -

Read more

Local News