Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைகிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாவீரன், அயலான் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்ததை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்கே. ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் தனது கரியரில் மைல் கல்லாக இருக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்குநர் என்பதால் கூடுதல் கவனத்தையும் படம் பெற்றுள்ளது.

முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக இராணுவ வீரர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சிவா. இந்தப் படத்தின்போதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி நடித்தும் முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகிறது. 

அடுத்தது சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படம், வெங்கட் பிரபுவுடன் ஒரு படம் என பிஸி லைன் அப் இருக்கிறது. இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவா நடிக்கும் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாயாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அதில் நடுவராக ரம்யா கிருஷ்ணன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News