Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

35 நாட்களில் இசைஞானி செய்த சூப்பர் விஷயம்!‌ இளையராஜா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் துள்ளல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்லாயிரக்கணக்கான பாடல்களை வெற்றி பாடல்களாக கொடுத்துள்ளார். அவரது இசை இன்னும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. சமீபத்திய உதாரணமாக, விடுதலை திரைப்படத்தை குறிப்பிடலாம்.

விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்துள்ள சூழலில், இளையராஜா தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவர் தனது புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்தார். மாலை 6 மணிக்கு, அவர் வீடியோ மூலம் தனது புதிய முயற்சியை உற்சாகமாக அறிவித்தார்.

இளையராஜா நேற்று காலை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். இது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்தனர். ஜூலை மாதத்தில் சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா முடிந்த நிலையில், இது குறித்து இளையராஜா அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இளையராஜா 35 நாட்களில் சிம்பொனி இசையை உருவாக்கியதாகவும், அதை பற்றிய பகிர்ந்துள்ளார். இதே போன்ற முயற்சியை அவர் முன்னதாக மேற்கொண்டிருந்த சூழலில், தற்போது குறுகிய காலத்திலேயே மீண்டும் அதை சாதித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் பேசும் உற்சாகம், அதை பார்த்த ரசிகர்களுக்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News