சூர்யாவின் 44-ஆவது படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றுகிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
சூர்யாவின் தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சூர்யா திரைத்துறையில் 27 வருடங்கள் பயணித்து வருவதை கொண்டாடும் வகையில் ஒரு வீடியோவும், “சூர்யா 44” படக்குழு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது, மற்றும் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.