இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், ‘உறியடி’ விஜயகுமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அறிவு’. இதில் ‘கயல்’ ஆனந்தி, சிங்கம் புலி, குலப்புள்ளி லீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவி ட்ரோன் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘உன்னை நீயே’ வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இப்பாடலை சூரஜ் சந்தோஷ் பாடியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இப்பாடலை வெளியிட்டார்.
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அறிவு’ திரைப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
