Advertisement

‘நவோரியா’ படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பமும் கிராபிக்ஸ் காட்சிகளும் – சிம்புதேவன் விளக்கம்

விமல், அன் ஷீத்தல், ஆரி அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நவோரியா’ திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல், பாலசரவணன், நிழல்கள் ரவி, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டிசிபி ட்ரீம் ஹவுஸ் மற்றும் சிம்புதேவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் தொழில்நுட்பப் பணிகள் குறித்துப் பேசிய இயக்குநர் சிம்புதேவன், ‘நவோரியா’ முழுவதும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். செல்போன்களில் ஏ.ஐ. மூலம் துல்லியமான காட்சிகளை உருவாக்க முடிந்தாலும், அதே தரத்தை 4K தொழில்நுட்பத்தில் பெரிய திரைக்குக் கொண்டுவருவது இன்னும் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். தற்போது ஏ.ஐ. சில குறிப்பிட்ட பேட்ச் ஒர்க் பணிகளுக்கு மட்டுமே உதவுவதாகவும், இப்படத்திலும் தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளதாகவும் விளக்கினார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குப் படமாக ‘நவோரியா’ இருக்கும் என்றும் அவர் கூறினார். திரையரங்கில் ரசிகர்கள் கவலைகளை மறந்து சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply