Advertisement

நட்பும் கோடை விடுமுறை நினைவுகளும்… டிசம்பர் 4-ல் வெளியாகும் ‘சம்மர் ஹாலிடேஸ்’

நகர வாழ்க்கைக்கும் கிராமத்து வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டையும், குழந்தைகளின் நட்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படம். ஸ்ரீகர் நயன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் மற்றும் விஜிபி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜெயசுதா, ரோஹன் ராய், அருண் தேவ், குஷி, வாசுகி ஆனந்த், ராஜீவ் கனகலா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோதாவரி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் கதை நிகழ்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறுவன் ஆர்.வி., கோடை விடுமுறைக்காகப் பாட்டி வீட்டுக்குச் செல்கிறான். அங்கு பொருளாதாரச் சிரமங்களுடன் வாழும் கே.வி. என்ற உள்ளூர் சிறுவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் வெவ்வேறு பின்னணியைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குள் உருவாகும் நட்பு பல சுவாரசியமான அனுபவங்களுக்கும் சாகசங்களுக்கும் வழிவகுக்கிறது.

டிசம்பர் 4-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. குழந்தைகளுடன் இணைந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியளித்ததாகக் கூறிய ஜெயசுதா, அவர்களின் இயல்பான செயல்பாடுகள் படப்பிடிப்பை மேலும் சிறப்பாக்கியதாகத் தெரிவித்தார். தலைமுறைகளுக்கு இடையிலான உறவையும், கோடை விடுமுறையின் மகிழ்ச்சியையும் இப்படம் வெளிப்படுத்துவதுடன், குடும்பத்தினருக்கு அவர்களது பழைய நினைவுகளையும் மீட்டெடுக்கும் என்றும் கூறினார்.

Add a Comment

Leave a Reply