Advertisement

25 நாட்கள் கடுமையான பயிற்சி… 8 மணி நேரம் நடனமாடிய ஸ்ரத்தா கபூர்!

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈத்தா’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மராத்தியக் கலை வடிவங்களான தமாஷா, லாவணி ஆகியவற்றில் சிறந்து விளங்கிய விதாபாய் நாராயண் காவ்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திலிருந்து ‘ஜிஜி ரே ஜி’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலுக்கான நடனக் காட்சிக்காக ஸ்ரத்தா கபூர் 25 நாட்கள் தினமும் 8 மணி நேரம் பயிற்சி செய்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு காலிலும் தலா 4 கிலோ எடையுள்ள சலங்கைகளை அணிந்துகொண்டு நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

படப்பிடிப்பின் முதல் நாளில் சிறப்பாக நடனமாடிய அவருக்கு, இரண்டாவது நாளில் தசை வலி ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஒரு மாத இடைவெளிக்குப் பிறகே அந்த நடனக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply