‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2’, ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘ட்ரீம் கேர்ள் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே. திரையுலகில் வெற்றி, தோல்வி என இரண்டையும் சந்தித்து வரும் அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமாவைப் போலவே பல ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளன. வெற்றிகளையும் சவால்களையும் மாறி மாறிச் சந்தித்து வருகிறேன். இதன் மூலம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.
நமக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு உறுதியாக ‘நோ’ சொல்லத் தயங்கக் கூடாது. ஒரு விஷயத்தை விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாக மறுப்பது அவசியம். இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க முடியும். குறிப்பாக, நடிகைகள் தங்களுக்குப் பிடிக்காத செயல்களுக்கு மறுப்பு தெரிவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
