Advertisement

அயோத்தி ராமர் கோயிலில் பூஜையுடன் தொடங்கும் அர்ஜுனின் புதிய பான் இந்தியா படம்!

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கும் புதிய தேசபக்தித் திரைப்படத்தின் தொடக்க விழா நாளை அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறவுள்ளது. Presidential Movies International நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை அனுப் மோகன் தயாரிக்கிறார்.

ஒரு திரைப்படத்தின் பூஜை விழா அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இந்தியத் திரையுலகில் இதுவே முதல் முறை எனக் கூறப்படுவதால், இந்த நிகழ்வு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படவுள்ளது. இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்க உள்ளனர்.

தேசப்பற்று, வீரம், தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. அர்ஜுன் இயக்கும் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் எழுதியுள்ளார். பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணையவுள்ளனர். Presidential Movies International சார்பில் அனுப் மோகன் தயாரிக்கும் இப்படத்தில், ஜோஸ் எம். தாமஸ் ராய் செயல் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

Add a Comment

Leave a Reply