Advertisement

அரசியல் என்பது ஆசையல்ல, சேவை… – விஜய் சேதுபதி கருத்து!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முழுக்க ரயிலில் நடைபெறும் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், படத்திற்கான நேர்காணலில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம், “முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள். அவரது ஆட்சி எப்படி இருக்கிறது? உங்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “விஜய் சாருடன் நான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், அரசியல் என்பது அவர்கள் வகுக்கும் திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல விஷயங்களைக் கொண்டது. அவற்றைக் கவனித்துக்கொண்டிருப்பது என் வேலை இல்லை. அரசியலுக்கு வருவது என்பது ஆசையல்ல; அது ஒரு சேவை.

நாங்கள் நடத்தும் அமைப்பின் மூலமாக இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஒரு குளத்தைத் தூர்வாரியிருக்கிறோம். பலருடைய கல்விக்கும் உதவி செய்து வருகிறோம். இதுபோன்ற இன்னும் பல பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இதுவும் அரசியல்தான்.

நான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் இத்தகைய உதவிகளைச் செய்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அரசியல் கருத்துகளைப் பேசுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், எந்த ஆட்சியாக இருந்தாலும் அதை நாகரிகமாக ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல், ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கருத்து தெரிவிப்பது அரைகுறையான செயலாகும். நாங்கள் கூறும் கருத்துகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் எங்கள் படத்தின் வெற்றியைப் பாதித்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply