இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் நடிப்பில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ‘Dada’, ‘இந்தியன் 3’, ‘ராமாயணா பார்ட் 2’ உள்ளிட்ட படங்கள் அவரது கைவசம் உள்ளன.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் காஜல் அகர்வால், தற்போது தனது தங்கையுடன் துபாய்க்குச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
