கொரட்டலா சிவா இயக்கத்தில் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் 2024ஆம் ஆண்டு வெளியான பான் இந்தியா திரைப்படம் “தேவரா”. இரண்டு பாகங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் 2024 செப்டம்பர் மாதம் வெளியானது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது சோனி டிவி தெலுங்கு நிறுவனம் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
